search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயியை தேடி வரும் குரங்குகள் கூட்டம்"

    சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் உணவுக்காக தன்னை தே(நா)டி வரும் குரங்குகளுக்கு பழம், கரும்பு போன்றவைகளை விவசாயி வழங்கி வரும் காட்சி தினமும் நடந்து வருகிறது. #monkeys

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள புது வட வள்ளி பண்ணாரியம்மன் நகரில் வசித்து வருபவர் ராமலிங்கம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். விவசாயி. இவரது வீட்டின் எதிரே கால்நடை துறைக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இதில் ஏராளமான மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.

    அருகே வனப்பகுதி உள்ளதால் அங்கிருந்து ஏராளமான குரங்குகள் இந்த இடத்தில் நமக்கு ஏதாவது உணவு மற்றும் தண்ணீர் கிடைக்குமா? என வந்து செல்லும்.

    இதை கண்ட ராமலிங்கம் அந்த குரங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்க எண்ணினார்.

    குரங்குகளுக்கு முதலில் குடிப்பதற்கு தண்ணீர் வழங்கி வந்த ராமலிங்கத்திடம் குரங்குகள் அன்பாக பழக தொடங்கியது. அவரும் குரங்குகளுக்கு தோழனாகி விட்டார்.


    தண்ணீர் மட்டும் வழங்கி வந்த ராமலிங்கம் பிறகு தன்னை தே(நா)டி வரும் குரங்குகளுக்கு பழம், கரும்பு போன்ற உணவுகளையும் வழங்கி வருகிறார்.

    மேலும் அந்த குரங்குகள் விளையாட ஊஞ்சலும் கட்டி உள்ளார். உணவை ருசித்த குரங்குகள் அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடி உற்சாகமாக விளையாடுகிறது.

    தினமும் அங்கு 20 குரங்குகள் வருகிறது. ராமலிங்கம் கொடுக்கும் உணவை சாப்பிட்டு அவரது தோளில் உரிமையுடன் உட்கார்ந்து அவர் ஊட்டும் உணவை சாப்பிடுகிறது.

    இந்த அபூர்வ காட்சி தினமும் நடந்து வருகிறது.  #monkeys

    ×